உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே காவிரி பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

ரயில்வே காவிரி பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரோடு: குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் காவிரி பாலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியில், ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையில் எஸ்.ஐ., முருகானந்தம் மற்றும் போலீசார், பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து விசாரித்தனர். ரயில்களிலும் ரோந்து மேற்கொண்டனர்.இதேபோல் ஈரோடு ரயில்வே காவிரி பாலம் முன்புறம், துப்பாக்கி ஏந்திய ஈரோடு ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே போலீசாரின் சோதனை இன்று நள்ளிரவு வரை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ