உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாடு

இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாடு

ஈரோடு, இந்திய மாணவர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் நவீன் தலைமையில் ஈரோட்டில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லுாரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசு சட்டக்கல்லுாரி அமைக்க வேண்டும். பாரதியார் பல்கலை கழகத்தின் முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்க வேண்டும். பெருந்துறை தாலுகாவில் அரசு கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும். அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் பஸ் வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இதை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக பூதசரதன், செயலராக நவீன், துணை தலைவர்களாக சரண்யா, சுச்சுதன், துணை செயலர்கள் கதின்பாண்டி, கோகுலகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை