உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலியோ சொட்டு மருந்து முகாமில் ௯௯ சதவீதம் வழங்கியதாக தகவல்

போலியோ சொட்டு மருந்து முகாமில் ௯௯ சதவீதம் வழங்கியதாக தகவல்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், ௯௯ சதவீதம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 1,412 மையங்களில், 5,391 பணியாளர் மூலம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. கிராமப்புற பகுதிகளில், ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து 593 குழந்தைகள், நகர் பகுதியில், 48 ஆயிரத்து, 758 குழந்தைகளுக்கும் என ஒரு லட்சத்து, 76,350 குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடந்தது.இதில் கிராமப்புற பகுதியில் ஒரு லட்சத்து, 25,942 குழந்தைகள், நகர் புற பகுதியில், 48, 229 குழந்தைகள் என ஒரு லட்சத்து, 74,171 குழந்தைகளுக்கு அதாவது, 99 சதவீதம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை