உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பொது சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தல்

பொது சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தல்

பொது சுகாதார வளாகம்அமைக்க வலியுறுத்தல்ஈரோடு, அக். 29-மொடக்குறிச்சி அட்டவணை அனுமன்பள்ளி பஞ்., நாகமலைப்புதுார் குடியிருப்பு பகுதியினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி கூறியதாவது:நாகமலைபுதுார் குடியிருப்பு பகுதியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தில், 150க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளோம். இங்கு பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால் காலைக்கடனை கழிக்க, சாலையோரம், கீழ்பவானி வாய்க்கால் கரை, புறம்போக்கு நிலம், மயானப்பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. பொது சுகாதார வளாகம் அமைக்க பஞ்சாயத்திலும், ஊரக வளர்ச்சி துறையிலும் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. மழைக்காலங்களில் கூடுதல் சிரமத்தை சந்திக்கிறோம். எனவே பொது சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை