கோபி பகுதிகளில் நெல் நடவு தீவிரம்
கோபி: கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில், நெல் நடவுப்பணி தீவிரமாக நடக்கிறது.பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, கடந்த ஆக., ௧௫ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாற்றாங்கால் அமைத்து, ஏ.எஸ்.டி., 16, ஏ.டி.டீ., 51 உள்ளிட்ட ரக விதை நெல் விதைத்திருந்தனர். தற்போது நாற்றாக முளைத்ததால், நாற்றாங்காலில் இருந்து பறித்து, நடவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கோபி பகுதியில் குள்ளம்பாளையம், நாதிபாளையம், கடுக்காம்பாளையம், கொரவம்பாளையம், ஐய்யம்புதுார் உள்ளிட்ட பகுதியில் நடவுப்பணி தீவிரமாக நடக்கிறது. டிரில்லர் மூலம் உழவுப்பணிக்கு ஏக்கருக்கு, 6,000 ரூபாய், மாட்டு உழவாக பரம்பு அடிக்க ஏக்கருக்கு, 1,000 ரூபாய், நடவுப்பணிக்கு ஏக்கருக்கு, 5,500 ரூபாய் செலவாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.