கனவு இல்ல திட்டத்தில் பணி ஆணை வழங்கல்
தாராபுரம்,கலைஞரின் கனவு இல்ல திட்ட விழா, அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில், திருப்பூரை அடுத்த பெருமாநல்லுாரில் நேற்று நடந்தது. அதேசமயம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், காணொலி காட்சியில் நடந்த நிகழ்வில், மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி பங்கேற்றார். இதில் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 29 பயனாளிகளுக்கு, கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில், பணியாணைகளை அமைச்சர் கயல்விழி வழங்கினார்.