உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மல்லிகை பூ கிலோ 400 ரூபாயாக சரிவு

மல்லிகை பூ கிலோ 400 ரூபாயாக சரிவு

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகு-தியில், 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, முல்லை பூ சாகுபடி செய்யப்படுகிறது. தினமும் சராசரியாக, 10 டன் பூ அறு-வடை செய்யப்படும். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் இங்கிருந்து விற்பனைக்கு அனுப்பப்படுகின்-றன. கோடை சீசனால் மல்லிகை விளைச்சல் அதிகரித்துள்ளது. பனிக்காலத்தில் ஒரு ஏக்கரில் ஒரு கிலோ கிடைத்த தோட்டத்தில் தற்போது, 50 கிலோவுக்கு மேல் கிடைக்கிறது. சில நாட்களுக்கு முன் முகூர்த்த சீசனால் தேவை இருந்ததால் கிலோ மல்லிகை பூ, 800 ரூபாய் வரை விற்றது. தற்போது சுப நிகழ்வு இல்லாதாதல் விலை சரிந்து விட்டது. கிலோ மல்லிகை பூ, ௪00 ரூபாய்க்கு விற்-கிறது. முல்லை கிலோ, 740 ரூபாய், சம்பங்கி, 70 ரூபாய், அரளி, 60 ரூபாய்க்கும் விற்றது.இதேபோல் சத்தி பூ சந்தையில் நேற்று ஒரு கிலோ முல்லை பூ,740 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை-420, காக்கடா-325, செண்டுமல்லி- 69, கோழிகொண்டை-24, சம்பங்கி-70, அரளி-60, துளசி-40, செவ்வந்தி-140 ரூபாய்க்கும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை