உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்குவாரி வெடி விபத்து பலி; நடவடிக்கை கோரி மனு

கல்குவாரி வெடி விபத்து பலி; நடவடிக்கை கோரி மனு

ஈரோடு: கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாட்டவள்ளியை சேர்ந்த ஆறுமுகம், 42. அவரது மருமகள் ரம்யா, 23, தன் இரண்டு வயது குழந்தையுடன் வி.சி. கட்சி ஈரோடு--திருப்பூர் மண்டல செயலர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் நேற்று அளித்த மனு விபரம்: என் மூத்த மகன் அஜீத், 27, மூன்று ஆண்டுக்கு முன்பு பவானி பெருமாள் மலை பகுதியை சேர்ந்த சங்கர் மகள் ரம்யாவை, 23, காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரம்யா நிறைமாத கர்ப்பிணி. ஏற்கனவே 2 வயதில் மகள் உள்ளார். டி.என்.பாளையத்தில், ஈஸ்வரி லோகநாதனுக்கு சொந்தமான கல் குவாரியில் இரண்டு ஆண்டாக அஜீத் வேலை செய்தார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணியளவில் குவாரியில் பாறைக்கு வெடி வைத்தபோது நடந்த விபத்தில் அஜீத், கோபி அயலுாரை சேர்ந்த செந்தில்குமார், 50, ஆகிய இருவர் உடல் சிதறி பலியாகினர். இறப்புக்கு காரணமான கல்குவாரி உரிமையாளர் மீதும், அல ட்சியமாக செயல்பட்ட கனிமவளத்துறை மற்றும் வருவாய் துறையை சார்ந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீட்டு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி