உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ.க.,விற்கு கொங்குநாடு கட்சி ஆதரவு

பா.ஜ.க.,விற்கு கொங்குநாடு கட்சி ஆதரவு

கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் முன்னேற்றசங்கம் மற்றும் கொங்கு தேசிய மறுமலர்ச்சி மக்கள் கட்சி ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாக கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் தலைவர் முனுசாமி தெரிவித்தார். அவர் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக இந்த சமுதாயத்தில் ஒருவர் கூட எம்எல்ஏ., எம்பி பதவியில் இல்லை. எனவே எங்கள் சமுதாயத்திற்குரிய பிரதிநிதிததுவத்தை வழங்க வேண்டும். மத்தியில் ஓபிசி 27% ஒதுக்கீட்டை 3 ஆக பிரித்து ரோஹிணி கமிஷன் அறிக்கையின் படி டி.என்.டி சமுதாயத்திற்கு 9% வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கிய நிர்வாகிகள் வரும் பாராளுமன்றத்தேர்தலில் தங்கள் முழுஆதரவை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி