உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கையுந்து பந்து போட்டியில் குமுதா பள்ளி முதலிடம்

கையுந்து பந்து போட்டியில் குமுதா பள்ளி முதலிடம்

நம்பியூர்: ஈரோடு மாவட்ட அளவிலான, 14, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டி நம்பியூர், குமுதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இதேபோல், 17 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண்கள் கையுந்து பந்து போட்டி, சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.17 மற்றும் 19 வயது பிரிவில் நம்பியூர் குமுதா பள்ளி மாணவ, மாணவியர் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றனர். இதன் மூலம் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர். ௧4 வயது பிரிவில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றனர். மாநில போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவ, மாணவியரை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை