உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வழக்கறிஞர் கொலை வழக்கு: கோர்ட்டில் குற்றவாளிகள் ஆஜர்

வழக்கறிஞர் கொலை வழக்கு: கோர்ட்டில் குற்றவாளிகள் ஆஜர்

தாராபுரம், தாராபுரத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தனியார் பள்ளி அருகே, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், 41, கடந்த ஜூலை 28ல், ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக பள்ளி தாளாளர் தண்டபாணி, அவரது மகன் கார்த்திகேயன் உள்பட, 20 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நேற்று குற்றவாளிகள் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றவாளிகளுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், விசாரணையை டிச., 5ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ