திம்பத்தில் சிறுத்தை உலா
திம்பம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதையில், புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இரைதேடி சாலையை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது.மலைப்பாதை ஆறாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று அதிகாலை சிறுத்தை சாலையில் சாவகாசமாக நடந்து சென்றது. இதனால் மலைப்பாதை சாலையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.