இலக்கிய மன்ற மாநில போட்டி: 15 பேர் தேர்வு
ஈரோடு, பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான இலக்கிய மன்ற போட்டி, தமிழ், ஆங்கில வழியில் பேச்சு, கட்டுரை, கவிதை, கதை கூறுதல், வினாடி - வினா போட்டி நடந்தது. சிறார் திரைப்பட பிரிவு தலைப்பில் தனி நபர் நடிப்பு, கதை வசனம், ஒளிப்பதிவு என மூன்று பிரிவில் போட்டி நடந்தது. பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் போட்டியில் பங்கேற்றனர். போட்டிகளில் முதலிடம் பிடித்த 6, 7ம் வகுப்பு மாணவ--மாணவிகள், 15 பேர், கோவையில் நவ., 11ல் நடக்கும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.