ஈரோட்டில் அரசு கேபிள் டிவி இணைப்பை துண்டித்தவர் கைது
ஈரோடு: ஈரோடு மாநகரில் கடந்த சில நாட்களாக, பல இடங்களில் அரசு கேபிள் 'டிவி' சிக்னல் இணைப்பை தொடர்ச்சியாக துண்டிக்கப்-பட்டு வந்தது. இதுகுறித்து ஆப்பரேட்டர்கள், அரசு கேபிள் 'டிவி' நிறுவன தனி தாசில்தாரிடம் புகாரளித்தனர். தாசில்தார் தாமோதரன் ஆய்வு செய்ததில், ௩ கி.மீ., துாரத்திற்கு ஒயர் துண்-டிக்கப்பட்டிருப்பதும், 10 ஆயிரம் இணைப்புகள் பாதிக்கப்பட்டி-ருப்பதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், ஈரோடு, நாடார் மேடு, நேரு வீதியை சேர்ந்த பரஞ்ஜோதி, 45, என்பவரை கைது செய்தனர். கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர் சம்பள பாக்கி வைத்தி-ருந்ததால், ஒயரை துண்டித்ததை ஒப்புக்கொண்டார்.