மேலும் செய்திகள்
பனியன் நிறுவன தொழிலாளி பலி
14-Jul-2025
பு.புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி அடுத்த கலைஞர் நகரை சேர்ந்தவர் கண்ணப்பன், 43, கூலித் தொழிலாளியான இவர் நேற்று காலை, 6:00 மணியளவில் தனது டியோ மொபட்டில் பவானிசாகர் சாலையில் புன்செய்புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். வடக்கு காந்திபுரம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க, கண்ணப்பன் பிரேக் போட்டார். அப்போது, நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த சாக்கடை வடிகாலில், டூவீலருடன் விழுந்து காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று மதியம் உயிரிழந்தார். புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14-Jul-2025