உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை

அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை

ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் ஆய்வு மேற்கொண்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது அரசு மருத்துவமனையில் தினசரி மருத்துவ சேவை பெறுவோர் எண்ணிக்கை கூடியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சாயப்பட்டறை மற்றும் தோல் பதனிடும் ஆலைகள் இருப்பதால் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை தொடங்கப்பட்டது. ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாக்குமரி, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் 4.19 லட்சம் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 176 நபர்களுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனையிலும் சிசிடிவி கேமரா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை