உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தன்னாசியப்பன் கோவிலில் வரும் 24ல் மாசி திருவிழா

தன்னாசியப்பன் கோவிலில் வரும் 24ல் மாசி திருவிழா

சென்னிமலை :சென்னிமலையில், மலைமேல் உள்ள சித்தர் தன்னாசியப்பன் கோவிலில் மாசி திருவிழா வரும், 24ம் தேதி நடக்கிறது.சென்னிமலையில், மலைமேல் உள்ள முருகன் கோவில் பின்புறம் சித்தர் லாடகுரு அய்யன் தன்னாசியப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 19வது ஆண்டு மாசி திருவிழா, பவுர்ணமி பூஜை வரும் 24ல் நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் நாளை காலை, 7:00 மணிக்கு மடவிளாகம் சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர். 24 காலை, 8:00 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள செங்கத்துரை பூசாரி மடத்தில் தீர்த்த குடங்களுக்கு அபிஷேக பூஜை நடக்கிறது. 9:00 மணிக்கு மேல் பக்தர்கள் தீர்த்த குடங்களுடன் புறப்பட்டு, படிக்கட்டுகள் வழியாக மலை மேல் உள்ள முருகன் கோவிலை அடைகின்றனர். அங்கு முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.அதன்பிறகு முருகன் சன்னதி பின்புறம் உள்ள வள்ளி,தெய்வானை கோவிலுக்கு சென்று. அங்கு அமிர்தவல்லி, சுந்தரவள்ளி ஆகியோருக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது. இறுதியாக, சித்தர் தன்னாசியப்பன் கோவிலுக்கு தீர்த்த குடங்களுடன் சென்று, மதியம், 12:00 மணிக்கு யாக பூஜைகள் நடைபெறும்.ஏற்பாடுகளை, அய்யன் தன்னாசியப்பன் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை