உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா

நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா

பவானி: பவானி நகரவை கிழக்கு நடுநிலைப்பள்ளியிலன் நுாற்றாண்டு விழா, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, கல்வெட்டு திறப்பு மற்றும் இலக்கிய மன்ற விழா நேற்று நடந்தது. இதில் வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி பங்கேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினார். நுாற்-றாண்டு கல்வெட்டை பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் திறந்து வைத்து பேசினார். மாலையில் நடந்த இலக்கிய மன்ற விழாவில், பள்ளி தலைமையாசிரியை சிவகாமி வித்யா வரவேற்றார்.நகர்மன்ற தலைவர் சிந்துாரி தலைமை வகித்தார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்-பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை