உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மத்திய அரசு பாராட்டு பெற அமைச்சர் முத்துசாமி ஐடியா

மத்திய அரசு பாராட்டு பெற அமைச்சர் முத்துசாமி ஐடியா

ஈரோடு: தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு மரப்பாலத்தில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. சபை தலைவர் ஹபீபுல்லா தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்து சாமி, பிரகாஷ் எம்.பி., சந்திர குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ''மத்திய அரசு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது வருத்தத்துக்குரியது. இதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதை செய்தால் மத்திய அரசுக்கு சிறிய பாராட்டாவது கிடைக்கும்,'' என்றார். கூட்டத்தில் காங்., மண்டல தலைவர் ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ