உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பள்ளியில் இருந்து மாயமான சிறுவன் மீட்பு

அரசு பள்ளியில் இருந்து மாயமான சிறுவன் மீட்பு

ஈரோடு,:ஈரோட்டில் கொள்ளுக்காடு மேட்டில், அரசு சிறுவர் இல்லம் உள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 13 வயது சிறுவன் தங்கி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். கடந்த, 10ல் பள்ளியில் இருந்து தப்பினார். மொடக்குறிச்சி போலீசார் தேடிவந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன் திருச்சியில் உறவினர் வீட்டில் சிறுவனை பிடித்தனர். பெற்றோரை காணவே பள்ளியில் இருந்து வெளியேறியதாக தெரிவித்துள்ளார். சிறுவனை ஈரோடு அழைத்து வந்து போலீசார், அரசு இல்லத்தில் மீண்டும் சேர்த்தனர். மீண்டும் தப்பிக்கலாம் என்பதால் பள்ளிக்கு அனுப்பாமல், சிறுவர் இல்லத்திலேயே தங்க வைத்துள்ளனர்.சிறுவனை பெற்றோரிடமே ஒப்படைக்க, அரசு இல்ல நிர்வாகிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே பள்ளியில் இருந்த சிறுவன் மாயமானது தொடர்பாக வகுப்பாசிரியை, தலைமை ஆசிரியைக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை