மேலும் செய்திகள்
தொழிலாளியை தாக்கி நகை, பணம் பறிப்பு
10-Nov-2025
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மொபட்டில் சென்ற முதியவரிடம், மர்ம நபர்கள் தங்க செயினை பறித்து சென்றனர்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி, 67; இவர் கடந்த, 8ல் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே முனிநாதபுரம் பகுதியில், மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் கருணாநிதியை பின் தொடர்ந்த சென்ற மூன்று பேர், அவர் அணிந்திருந்த, ஏழு பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, கருணாநிதி போலீசில் புகார் செய்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
10-Nov-2025