உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்பியூர் அரசு கல்லுாரியில் கலந்தாய்வு அறிவிப்பு

நம்பியூர் அரசு கல்லுாரியில் கலந்தாய்வு அறிவிப்பு

நம்பியூர்: நம்பியூர் -திட்டமலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டுக்கு, 450 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு விதிமுறைகளின்படி நடக்கவுள்ளது. இதற்கான கலந்தாய்வு வரும், 10ம் தேதி முதல், 12 வரை நடக்கிறது. இதுகுறித்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் போது, அசல் கல்வி சான்றிதழ், சாதி சான்று, அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவிலன புகைப்படம், ஆதார் அட்டை, அஞ்சலக வங்கி கணக்கு புத்தகம் அசல் மற்றும் 5 நகல்களை எடுத்து வர வேண்டும். இத்தகவலை கல்லுாரி முதல்வர் சூரியகாந்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி