ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், த.மா.கா., மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலையில், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், நேற்று மனு வழங்கிவிட்டு, பொதுச் செயலாளர் விடியல் சேகர், நிருபர்களிடம் கூறியதாவது:மாநில செயற்குழு கூட்டத்தில் தலைவர் வாசன், 'கட்சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுப்பதாக' தெரிவித்-துள்ளார். இதன்படி கட்சியில் அனைத்து மாநில, மாவட்ட நிர்வா-கிகளும் ராஜினாமா செய்து, தலைவர் வாசனிடம் கடிதம் கொடுத்-துள்ளோம். விரைவில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வாசன் அறி-விப்பார். இதற்கு எவ்வித அரசியல் காரணமும் இல்லை. மேலும் மாநில அளவில் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் மனு வழங்கி உள்ளோம். அம்மனுவில், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டதை சுட்டிக்-காட்டி, திரும்ப பெற கேட்டுள்ளோம். மாதம் தோறும் மின் கட்-டண விபரத்தை அளவீடு செய்ய வேண்டும்.ஏற்கனவே பால் விலை, வீட்டு வரி, சொத்து வரி, பத்திர பதிவு கட்டணம், குப்பை வரி, குடிநீர் வரி, மின்சார கட்டண உயர்வு என மக்கள் சிரமத்தை சந்திக்கும் நிலையில், தற்போதைய மின் கட்டண உயர்வு மேலும் பாதிப்பு ஏற்படுத்தும். இவ்வாறு கூறினார். அவருடன் மாநில துணை தலைவர் ஆறுமுகம், நிர்வா-கிகள் யுவராஜா, சந்திரசேகர், ரபீக், அன்புதம்பி உட்பட பலர் பங்-கேற்றனர்.