மலைவாழ் மக்களுடன்மனு கொடுத்த எம்.எல்.ஏ.,பர்கூர் மலை தேவர்மலையில், 30க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், 50 ஆண்டுகளாக வீடுகளின்றி, குடிசை, தார்பாய் குடில் அமைத்து வசிக்கின்றனர். ஒரு குடிலில், 15 பேர் வாழும் நிலை உள்ளது. எனவே தங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலத்திடம் கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து மலைவாழ் மக்களை அழைத்து சென்று, தாசில்தார் பெரியசாமியிடம், எம்.எல்.ஏ., மனு அளித்தார்.இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்புஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சோமசுந்தரம், காங்கேயம் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், தாலுகா ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் அவர் பொறுப்பேற்றார். இதேபோல் வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு மாற்றம் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் ஸ்டேஷனில் இருந்து, விடை பெற்றார்.அக்னிவீர் திட்டத்தில் பணிவிண்ணப்பிக்க யோசனைஇந்திய விமானப்படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தில், ஆட்சேர்ப்பு தேர்வு பதிவு இணைய வழியில் நடந்து வருகிறது. பிப்.,6க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பிளஸ் 2 வில், 60 சதவீத மதிப்பெண் பெற்ற அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி, 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில், 50 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள், https://agnipathvayu.cdac.inஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.பெண் நெசவு தொழிலாளி மின்சாரம் தாக்கியதில் சாவுபெரிய கொடிவேரி, டி.ஜி.புதுார், நால்ரோடு, நேரு வீதியை சேர்ந்த நட்ராஜ் மனைவி உமா, 52; தம்பதிக்கு, 16 மற்றும் 14 வயதில் இரு மகள்கள் உள்ளனர். கணவர் இறந்த நிலையில், கைத்தறி வைத்து, உமா பட்டு சேலை நெசவு நெய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் நெசவு நெய்து கொண்டிருந்தார்.அப்போது கைத்தறி மீது வெளிச்சத்துக்கு போடப்பட்ட ஒயரில் இருந்து மின்சாரம் கசிந்து, உமாவை தாக்கியது. இதில் கீழே விழுந்து கிடந்த உமாவை, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த உறவினர் பார்த்து விட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. கைத்தறி நெசவு நெய்த பெண், மின்சாரம் தாக்கி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.சிவன்மலை ஊராட்சியில்சமுதாயக்கூடம் திறப்புகாங்கேயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலை ஊராட்சியில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் காங்கேயம் சேர்மேன் மகேஷ்குமார், காங்கேயம் ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிவானந்தன், ஊராட்சி தலைவர் துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவி மாயம்ஈரோடு, புஞ்சை லக்காபுரம், லக்காபுரத்தை சேர்ந்த தொழிலாளி ராமன். இவரின், 16 வயது மகள், அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். கடந்த, 24ம் தேதி பள்ளிக்கு செல்லவில்லை. தேர்வுக்கு வீட்டில் இருந்தே படிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதேசமயம் வழக்கம்போல் ராமனும், அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர்.மதியம் தந்தையை மொபைல்போனில் தொடர்பு கொண்ட மாணவி, தன்னை தேட வேண்டாம். திருமணம் செய்து கொள்ள போகிறேன் என கூறிவிட்டு மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். ராமன் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.நிலாச்சோறு திருவிழா ஜோர்தைப்பூச விழாவை ஒட்டி, டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையத்தில், நிலாச்சோறு விழா வழக்கதமான உற்சாசக்துடன் நடந்தது. இதில் விநாயகர் சப்பரத்தை சுற்றி பெண்கள், சிறுமிகள் மற்றும் ஆண்கள், ஜாதி, மத வித்தியாசமின்றி நள்ளிரவு முதல் அதிகாலை வரை கும்மியடித்து பாடல் பாடி மகிழ்ந்தனர்.* பவானி அடுத்த காலிங்கராயன்பாளையம், என்.எஸ்.கே., வீதியில், நிலாச்சோறு வழிபாடு நடந்தது. இதில் பவுர்ணமி வெளிச்சத்தில் நிலா பிள்ளையாருக்கு மங்களப்பொருட்கள், மாவிளக்கு தட்டு, முளைப்பாரி படைத்தனர். குழந்தைகளை அலங்கரித்து படையலிட்ட இடத்தை சுற்றி கும்மிப்பாடல் பாடி வழிபட்டனர். அதிகாலையில் வாழை மரத் தேரில் பிள்ளையாரை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச்சென்று வாய்க்காலில் விட்டனர்.டாஸ்மாக் மது பாட்டில்பறிமுதல்; 2 பேர் கைதுடி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம், பழையூரில், பங்களாப்புதுார் போலீசார் நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். கொங்கர்பாளையம் தங்கவேல் மகன் கருப்புசாமி, 24, டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். 10 பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இதேபோல் டி.ஜி.புதுார், கொடிவேரி மேடு பகுதியில், கருணாமூர்த்தி, 50, என்பவரிடம் இருந்து, 120 டாஸ்மாக் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.கருங்கல்பாளையம் சந்தையில்95 சதவீத கால்நடை விற்பனைகருங்கல்பாளையம் மாட்டு சந்தையில், 95 சதவீத கால்நடைகள் விற்றன.ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று கூடியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக மாடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர்.இதில், 5,000 முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 70 கன்றுகள், 25,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 350 எருமை மாடுகள், 25,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகள், 70க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகளும் குவிந்தன.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா, கோவா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை ஆர்வமாக வாங்கினர். இரு வாரமாக பொங்கல் பண்டிகை உட்பட பல்வேறு காரணத்தால் மாடுகள் வரத்து குறைந்து, விற்பனையும் சரிந்தது. ஆனால், நேற்றைய சந்தைக்கு, 800க்கும் மேற்பட்ட மாடுகள் வரத்தாகி, 95 சதவீதம் விற்பனையானது.400 கிலோ குட்கா பறிமுதல்2 ராஜஸ்தான் வாலிபர் கைதுமொடக்குறிச்சி, நால்ரோட்டில் ஒரு காம்ப்ளக்சில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கவுதம் குமார், 30. மொபைல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், இங்கு விற்கப்படுவதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவருடன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அக்மாரா, 30, விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இவர், எழுமாத்துாரில் மொபைல் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில் கவுதம் குமார் வீட்டில் மொடக்குறிச்சி போலீசார், நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். இதில், 400 கிலோ புகையிலை பொருள் சிக்கியது. அவற்றை கடத்தி விற்க பயன்படுத்தப்பட்ட ஒரு காரும் இருந்தது. காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.வேன் கவிழ்ந்து 9 பேர் காயம்தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்ததில், ௯ பேர் காயமடைந்தனர்.சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த, 20 பேர், திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு சுற்றுலா சென்றனர். நேற்று காலை, 9:30 மணியளவில், ஊர் திரும்பினர். தாராபுரம் பைபாஸ் சாலையில் ஆலங்காடு பிரிவு அருகே, ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே மற்றொரு வாகனம் வந்து விட்டது. இதனால் விபத்தை தவிர்க்க, வேன் டிரைவர் முயற்சி செய்ததில், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவரான நாமக்கல், குமாரபாளையம் சரவணன், 34; இடைப்பாடியை சேர்ந்த அஜித், 23, சோனியா, 19, உள்பட ௯ பேர் காயமடைந்தனர். அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அ.தி.மு.க., மீனவர் பிரிவுசெயலாளர் ராஜினாமாஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மீனவர் செயலாளர் மற்றும் தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் உறுப்பினரான பாரூக், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சி பொது செயலாளர் இ.பி.எஸ்.,க்கு அனுப்பிய கடிதத்தில், 'அ.தி.மு.க.,வில் கிளை செயலாளர், ஈரோடு நகர துணை தலைவர், நகர அம்மா பேரவை இணை செயலாளர் பணிகளில் செயல்பட்டு, மாவட்ட மீனவர் பிரிவு செயலாளராக பணியாற்றினேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எனது பணியை பார்த்து வக்பு வாரிய உறுப்பினர் பதவி வழங்கினார்.தற்போது ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், என்னை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுவதால், நான் வகித்து வந்த மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.பிரதமர் பேச்சுஒளிபரப்புமுதல் தலைமுறை வாக்காளர்களுக்கான, பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு, காணொலி காட்சியில், தாராபுரத்தில் உடுமலை சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில், நேற்று காலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. பா.ஜ., மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நகர தலைவர் சதீஷ் நகர இளைஞரணி தலைவர் வினீத் உள்பட பலர் பங்கேற்றனர்.மாதிரி 'பூத்' அமைத்து ஓட்டுப்பதிவுதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு காளை மாட்டு சிலை அருகே உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில், ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில், 'மாதிரி ஓட்டுச்சாவடி மையம்' அமைத்து நேற்று மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர், நிலை அலுவலர்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் வைக்கப்பட்டு, தேர்தல் நாள் போலவே ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பொது மக்களையும் வாக்காளர் அடையாள அட்டை, பெயர் விபரத்தை வைத்து, பட்டியலில் அவரது பாகம், பக்கம் எண் போன்றவற்றை குறித்து, அவர் கொண்டு வந்த ஆவணத்தை பதிவு செய்தனர்.விரலில் கருப்பு மை வைத்து, ஓட்டுப்பதிவுக்கான துண்டு சீட்டை வழங்கப்பட்டது. ஓட்டுப்பதிவுக்கான பொத்தானை ஒரு அலுவலர் அழுத்தியதும், வாக்காளராக வந்த நபர், தனது ஓட்டை பதிவு செய்து 'பீப்' சத்தத்துக்கு பின் வெளியே வந்தார். அவரது பதிவுகள் வி.வி.பேடில் பதிவானது.