உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 8.25 கிலோ தங்க நகை கையாடலில் கைது எண்ணிக்கை மூன்றாக உயர்வு

8.25 கிலோ தங்க நகை கையாடலில் கைது எண்ணிக்கை மூன்றாக உயர்வு

ஈரோடு, ஈரோடு கூட்டுறவு நகர வங்கியில், 8.25 கிலோ தங்க நகையை கையாடலில், கைது எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.ஈரோடு மாநகர் முனிசிபல் காலனியில், ஈரோடு கூட்டுறவு நகர வங்கி செயல்படுகிறது. வாடிக்கையாளர் அடமானம் வைத்த, 8.25 கிலோ தங்க நகைகளை, வங்கி நகை மதிப்பீட்டாளரான ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதி ரமேஷ்குமார், 45; வங்கி மேலாளரான ஈரோடு மூலப்பட்டறை காந்தி நகர் கதிரவன், 55, ஆகியோர் கையாடல் செய்த புகாரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.இதில் தொடர்புடைய ரமேஷ்குமாரின் நண்பரான செந்தில்குமார், 38, என்பவரை, ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனால் கைது எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்த செந்தில்குமார், 'ஆக்டிங்' டிரைவராக வேலை செய்கிறார். கைது செய்யப்பட்ட ரமேஷ்குமார், கதிரவன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை