உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார்.சத்துணவு திட்டத்தில் கடந்த, 8 ஆண்டாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. 60,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். இதில் பணி செய்வோரில் பலர் கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள், நான்கு மையங்கள், ஐந்து மையங்களை சேர்த்து பார்க்க இயலாத நிலையில் உள்ளனர். சம்பளத்தொகை போக்குவரத்துக்கே செலவாகிறது. ஒரு மையத்தில் சமைத்து வேறு மையத்துக்கு சில கி.மீ., துாரம் தலையில் சுமந்து செல்வது சிரமமாக உள்ளது. உணவு சமைப்பதில் சிறு தாமதம், குறைபாடு ஏற்பட்டால் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கின்றனர். இதுபற்றி நடவடிக்கை எடுத்து, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை