துாய்மை பணியாளர்களுடன் அதிகாரிகள் சமபந்தி விருந்து
ஈரோடு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கந்தசாமி, துாய்மை பணியாளர்களுடன் விருந்து உண்டார். எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், செயல் அலுவலர் ஜெயலதா ஆகியோர் பங்கேற்றனர். இதேபோன்று, பண்ணாரி மாரியம்மன் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது.