உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர்கள் திருடிய பெயிண்டர்கள் கைது

டூவீலர்கள் திருடிய பெயிண்டர்கள் கைது

ஈரோடு:ஈரோடு, திருவேனி நகர், சில்வர் ஸ்பிரிங் அபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் கபிலேஷ், 31; இவரது ராயல் என்பீல்டு பைக், வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். வீதி மனோஜ்குமாரின் யமஹா பைக் திருட்டு போனது. இதுகுறித்த புகார்களின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். இது தொடர்பாக திருப்பூர் ஊத்துக்குளி நேதாஜி நகர் தேவா (எ) குரு தேவா, 26; திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடிவபாளையம் திருவள்ளுவர் நகர் முதல் வீதி வசந்தகுமார், 26, ஆகியோரை பிடித்தனர். இருவரையும் கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் பெயிண்டர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !