உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விண்ணப்பள்ளி பஞ்சாயத்து மக்கள் குடிநீர் கோரி மறியல்

விண்ணப்பள்ளி பஞ்சாயத்து மக்கள் குடிநீர் கோரி மறியல்

புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி அடுத்த விண்ணப்பள்ளி பஞ்., புதுரோடு பகுதி மக்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சில நாட்களாக சரிவர குடிநீர் வினியோகிக்கவில்லை. பஞ்., நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், புதுரோடு பஸ் நிறுத்தம் அருகில் குடங்களுடன் சாலை மறியலில் நேற்று காலை ஈடுபட்டனர். புன்செய்புளியம்பட்டி போலீசார் உறுதியை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை