உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜமாபந்தி நடத்தக் கோரி தேர்தல் கமிஷனுக்கு மனு

ஜமாபந்தி நடத்தக் கோரி தேர்தல் கமிஷனுக்கு மனு

ஈரோடு : தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு, ஈரோடு கலெக்டர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்து, சில விதிகளை தளர்த்திய போதும், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இதனால் வழக்கமாக நடக்க வேண்டிய ஜமாபந்தி நடத்த முடியாமல் விவசாயிகள் பாதித்துள்ளனர். ஜூன், 4ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தாலும், அதன்பின் அறிவிப்பு செய்து ஜமாபந்தி நடத்த இம்மாத இறுதியாகும். எனவே தாமதம் செய்யாமல் ஜமாபந்தி நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ