உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்ட தடகள போட்டியில் போட்டோ பினிஷ் முறை

மாவட்ட தடகள போட்டியில் போட்டோ பினிஷ் முறை

திருப்பூர், திருப்பூர் மாவட்ட விளையாட்டு போட்டியில், மழையால் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி, அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில், 16ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. முதல் நாள் மழையால் ஒத்தி வைக்கப்பட்ட போல்வால்ட், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உட்பட போட்கள் நடத்தப்பட்டது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்கள் மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். இந்நிலையில் மாநில தடகள போட்டிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த போட்டோ பினிஷ் முறை, திருப்பூர் மாவட்ட தடகள போட்டியிலும் பயன்படுத்தப்பட்டது.வீரர், வீராங்கனையர் கூறுகையில், 'ஒவ்வொரு போட்டியின் முடிவுகள், வீரர்களின் ஓட்ட நேரம், முடிவு நேரம், எறிதல், தாண்டுதல் போட்டிகளின் துாரத்தை துல்லியமாக அளக்கும். துல்லியமாக அறிந்து கொள்வதுடன், சந்தேகம் இருப்பின் மீளாய்வு செய்ய போட்டோ பினிஷ் முறை மிகவும் பயனுள்ளது. இதனால், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர், நடுவர் தவறான தீர்ப்புகளை வழங்க முடியாது. துல்லியமான முடிவு என்பதால் வரவேற்கலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை