மேலும் செய்திகள்
பிரதான குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
15-Sep-2024
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் பஞ்.,அண்ணாநகர், வெங்கநாயக்கன் பாளையம் காலனி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குழாய் உடைப்பால், 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், வெங்கநாயக்கன் பாளையம் காலனி அருகே, 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் பி.டி.ஓ., விஜயலட்சுமி, பொதுமக்களிடம் மொபைல் போனில் பேச்சுவார்த்தை நடத்தினர். குழாய் உடைப்பை சரி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. போர்வெல் தண்ணீரும் வருவதில்லை. என்று மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். உடைப்பு சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறவே மக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
15-Sep-2024