உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸ் ஸ்டேஷன் கட்டட பணி துவக்கம்

போலீஸ் ஸ்டேஷன் கட்டட பணி துவக்கம்

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டும் பணி துவங்கி உள்ளது.ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீஸ் ஸ்டேஷன் கட்டி கொள்ள மருத்துவ நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்தது. கடந்த, 19ல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில், புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டும் பணி துவங்கி உள்ளது. வாகனங்கள் நிறுத்துமிடம், போலீஸ் ஸ்டேஷன், இன்ஸ்பெக்டர் தங்கும் அறை, குழந்தைகள் விளையாட்டு அறை, காவலர்கள் ஓய்வறை, கழிப்பிட வசதி, ஆவண காப்பக அறை உள்ளிட்டவை கட்டப்படும்.இப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ