உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூஜை

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூஜை

பெருந்துறை:பெருந்துறை ஒன்றியம் சீனாபுரத்தில், பெருந்துறை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 35 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு, நேற்று பூஜை நடந்தது. பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. ஜெயக்குமார் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்வில் அ.தி.மு.க., மாவட்ட கழக பொருளாளர் மணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் சின்னத்தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ