உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பண்ணாரி கோவிலில் மண்டபம் கட்ட பூஜை

பண்ணாரி கோவிலில் மண்டபம் கட்ட பூஜை

சத்தியமங்கலம், சத்தி அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில், 6.50 கோடி ரூபாய் நிதியில், சுற்று பிரகார மண்டபம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான பணியை, முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சியில் நேற்று தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து பூமி பூஜை செய்து பணி தொடங்கியது. கோவிலில் நடந்த விழாவில் ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் செயல் அலுவலர் மேனகா, பரம்பரை அறங்காவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ