உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதுகலை ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங்

முதுகலை ஆசிரியர் பணி நியமன கவுன்சிலிங்

ஈரோடு: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர்-உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை 1 பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 74 பேருக்கு பணி நியமன கவுன்சிலிங் கடந்த, 7ல் ஆன்லைன் மூலம் ஈரோடு ப.செ.பார்க் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் துவங்கியது.தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், வணிகவியல், கணினி பயிற்றுனர் நிலை-1, உடற்கல்வி இயக்குனர் நிலை-1 மற்றும் அரசியல் அறிவியல் பாட பிரிவுக்கான கவுன்சிலிங் நேற்று நடந்தது. இதில், 27 பேர் பங்கேற்றனர். இதில் வரலாறு, 12, வணிகவியல் ஒரு பணியிடம் மட்டுமே காலியாக இருந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தலைமையில் கவுன்சிலிங் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை