உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காதலனுக்கு திருமணம் பேராசிரியை தற்கொலை

காதலனுக்கு திருமணம் பேராசிரியை தற்கொலை

ஈரோடு,:ஈரோடு பெரியசேமூர் தென்றல் நகரை சேர்ந்த அண்ணாதுரை மகள் ரம்யா ஸ்ரீ, 26; எம்.இ., பட்டதாரி. சூரம்பட்டி குமணன் வீதியில் பெற்றோருடன் வசித்தார். ஈரோட்டில் ஒரு கல்லுாரியில் உதவி பேராசிரியையாக ஒன்றேகால் ஆண்டாக பணியாற்றினார். ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த சந்த்ருவை, ஏழு ஆண்டாக காதலித்துள்ளார். சந்த்ருவுக்கு இரண்டு வாரம் முன் திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ரம்யாஸ் வேதனை அடைந்தார். மன வேதனையில் கல்லுாரிக்கு செல்லாமல் இருந்த ரம்யாஸ்ரீ, வீட்டில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.* சித்தோடு அருகே ஆர்.என்.புதுாரை சேர்ந்த பெயிண்டர் செல்வராஜ், 43; இவரது குடிப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை