உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈர நிலங்களில் காணப்பட்ட அரிய வகை பறவைகள்

ஈர நிலங்களில் காணப்பட்ட அரிய வகை பறவைகள்

திருப்பூர் மாவட்டத்தில் குளம், குட்டை உள்ளிட்ட ஈர நிலங்களில், பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அரிய வகை பறவைகள் காண கிடைத்ததாக, பறவை கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்தனர்.தமிழகம் முழுக்க ஈர நிலங்களில் வாழும் பறவைகள் குறித்த கணக் கெடுப்பு நடத்தப்பட்டது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்திலும், கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நஞ்சராயன் குளம், செம்மாண்டம்பாளையம், மாணிக்காபுரம், சாமளாபுரம், பள்ளபாளையம், சேவூர் குளங்கள், சங்கமாங்குளம், தாமரைக்குளம் உள்ளிட்ட இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.உடுமலை வட்டத்தில், தேன் குளம், ராயர் குளம், செங்குளம், பெரிய குளம், ஒட்டு குளம், செட்டியார் குளம், கரிசல் குளம், சின்ன வீரம்பட்டி ஏரி, மருள்பட்டி ஏரி, பாப்பன் குளம் என, மாவட்டம் முழுக்க, 20 குளம், குட்டைகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.வனத்துறையினருடன், திருப்பூர் இயற்கை கழகத்தை சேர்ந்த, 14 பேர், தாராபுரம் இயற்கை கழகத்தைச் சேர்ந்த, 3 பேர் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர். வனத்துறையினர் கூறுகையில், 'ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. அரிய வகை பறவைகள் சில காணக் கிடைத்துள்ளன; காணக்கிடைத்த பறவைகளை பட்டியலிட்டு வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை