மேலும் செய்திகள்
பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குங்க!
21-Sep-2024
ஈரோடு, செப். 28-ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நேற்று நடந்தது.கூட்ட விவாதம் வருமாறு:* தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் ராஜூ: ஆவின் தயாரித்து வழங்கும் கால்நடை கலப்பு தீவன உற்பத்தி கடந்த செப்., மாதம் நிறுத்தப்பட்டது. அவற்றை உண்டு பழகிய மாடுகள், தண்ணீர் கூட குடிக்க மறுக்கிறது. எனவே கலப்பு தீவன உற்பத்தியை துவங்கி வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகம், பால் உற்பத்தியாளர் யூனியனுக்கு, 80 லட்சம் ரூபாய், ஊழியர்களுக்கு, 19 லட்சம் ரூபாய், ஊக்கத்தொகை, 3.50 கோடி ரூபாய் வழங்காமல் நிலுவை வைத்துள்ளது.* ஆவின் அதிகாரி: ஈரோடு ஆவின் நிர்வாகத்தின் கால்நடை தீவன உற்பத்தி ஆலைக்கு மொலாசஸ் வரத்தாகவில்லை. மஹராஷ்டிராவில் இருந்து நேற்று முன்தினம் வரத்தாகி நேற்று உற்பத்தி துவங்கிவிட்டது. அமுல் நிறுவனத்திடம், 350 டன் ஆர்டர் போட்டுள்ளோம். சில நாளில் வந்துவிடும். இருப்பினும் வரும் திங்கள் முதல் தட்டுப்பாடு இன்றி விற்பனையாகும். பாலுக்கான ஊக்கத்தொகை கடந்த ஜூன் வரை பாக்கி இல்லை. அதன் பின் வழங்க வேண்டியவர்களுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.* மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்: ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குறித்து ஆய்வு செய்து அவ்வப்போது நடவடிக்கை எடுக்கிறோம். 30 யூனிட் வரை மூடி உள்ளோம். மஹாராஷ்டிரா, மும்பை போன்ற இடங்களில் இருந்து மொத்தமாக இங்கு வரத்தாகிறது. அவற்றை வைத்துள்ள குடோன்களையும், கடைகளையும் கண்காணிக்கிறோம்.
21-Sep-2024