உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரியல் எஸ்டேட் நிறுவன கணக்காளர் விபத்தில் பலி

ரியல் எஸ்டேட் நிறுவன கணக்காளர் விபத்தில் பலி

காங்கேயம்: திருப்பூரை சேர்ந்தவர் சோழபாண்டி, 72; ரியல் எஸ்டேட் நிறுவன கணக்காளர். சண்முகம், 65, தணிக்காசலம், 25, சின்னமுனியப்பன்,40, சுப்பிரமணி, 60, மற்றும் டிரைவர் ஜீவானந்தம், 25, ஆகியோர் மாருதி ஈகோ காரில் திண்டுக்கல் அருகே நண்பரின் மகன் திருமண விழாவுக்கு நேற்று முன்தினம் மாலை சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினர். ஊதியூர் அருகே நள்ளிரவில் வந்த போது தாராபுரம்-திருப்பூர் சாலையில் வஞ்சிபாளையம் பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பி.ஏ.பி., கால்வாயில் பாய்ந்தது. அப்பகுதியினர் அனைவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் சோழபாண்டி உயிரிழந்தார். மற்றவர்களை திருப்பூர் மற்றும் கோவை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை