உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அஞ்சன காப்பு உற்சவம்

அஞ்சன காப்பு உற்சவம்

ஈரோடு: ஈரோடு கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் அஞ்சன காப்பு (தைல காப்பு) உற்சவ விழா நேற்று நடந்தது. முன்னதாக காலையில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, புண்யாகவாஜனை ஹோமம், பூர்ணாகுதியை தொடர்ந்து, உற்சவருக்கு திருமஞ்சனம், மூலவருக்கு தைல சாத்துப்படி நடந்தது. மதியம் கஸ்துாரி அரங்கநாதர் சுவாமி மூலஸ்தானம் சேருதல், மூலவர் சேவை நடந்தது. இன்று காலை திருமஞ்சனம், திருப்பாவாடை (திருவமுது படைத்தல்) பூஜை சாற்றுமறை, தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை