உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரே கடையில் 2 நாள் திருட்டு; பவானியில் ஆசாமிகள் தில்

ஒரே கடையில் 2 நாள் திருட்டு; பவானியில் ஆசாமிகள் தில்

பவானி: பவானியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 55; புது பஸ் ஸ்டாண்டில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நகராட்சி கடையை வாடகைக்கு எடுத்து, இனிப்பு, கார வகை விற்பனை செய்து வருகிறார்.கடந்த, ௨6ம் தேதி அதிகாலையில் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் இருவர் கடைக்குள் புகுந்தனர். 10 ஆயிரம் ரூபாய், காரம், இனிப்பு வகைகளை திருடி சென்றனர். 26ம் தேதி காலை கடை திறக்க வந்த கார்த்திகேயன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அன்றைய தினமே பவானி போலீசாருக்கு புகாரளித்தார். மர்ம நபர்கள் கடையில் கைவரிசை காட்டிய சிசிடிவி கேமரா பதிவும் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று அதிகாலையிலும் அதே ஆசாமிகள் கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் புகுந்தனர். கடையில் பணம் இல்லாததால் திரும்பியுள்ளனர்.நேற்றும் கடைக்கு வந்த கார்த்திகேயன் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார். இதுகுறித்த புகாரின்படி பவானி போலீசார், விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒரே கடையில் அடுத்தடுத்த நாட்களில், மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது, வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ