உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக்கில் ரூ.1.33 லட்சம் திருட்டு

பைக்கில் ரூ.1.33 லட்சம் திருட்டு

பவானி, பவானி அருகே சித்தார், ஏரங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பணன், 53; அடகு வைக்கப்பட்ட நகையை மீட்க, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு, ஆக்டிவா மொபட்டில் நேற்று முன்தினம் மாலை சென்றார்.கூட்டம் அதிகமாக இருந்துள்ளதால், சிறிது நேரம் காத்திருக்குமாறு வங்கியில் தெரிவிக்கவே, மொபைல்போன் ரீ-சார்ஜ் செய்ய, அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். கடைக்கு சென்ற பிறகுதான், மொபட் சாவியை எடுக்காமல் வந்தது தெரியவந்தது. வங்கி அருகே நிறுத்தியிருந்த இடத்துக்கு சென்றபோது, இருக்கை அடியில் வைத்திருந்த, ௧.௩௩ லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. அவர் புகாரின்படி, பவானி போலீசார் களவாணியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை