உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசுப்பள்ளி ஆசிரியை மீது ரூ.5 கோடி மோசடி புகார்

அரசுப்பள்ளி ஆசிரியை மீது ரூ.5 கோடி மோசடி புகார்

ஈரோடு:பெருந்துறை, சேனடோரியம், சிலேட்டர் புரம், வாத்தியார் தோட்டத்தை சேர்ந்த ராஜேஸ்குமார் தலைமையிலான சிலர், ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியை பார்வதி, 55; இவருக்கு இரு மகன்கள். இளைய மகன் பிரவீண், பெருந்துறை - சென்னிமலை சாலையில் ஓட்டல் நடத்தினார். தனக்கு தெரிந்தவர்கள், நண்பர், உறவினர்கள் என பலரிடம் காசோலை, பிராமிசரி நோட்டு கொடுத்து, பார்வதி கடன் பெற்றுள்ளார். அவர் கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பி வந்துள்ளன. இதுகுறித்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளனர். ஈரோடு, பெருந்துறை, காங்கேயம், திருப்பூரில் பலரிடம், 5 கோடி ரூபாய் அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த தொகையை கொண்டு ஆந்திராவில் சொத்து வாங்கியுள்ளாதாக தெரிகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்பதால், பார்வதி, பிரவீண் மற்றும் பார்வதியின் நண்பர் தலைமறைவாகி விட்டனர். அவர்களிடம் நான் கொடுத்த, 3.50 லட்சம் ரூபாயை பெற்று தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி