மேலும் செய்திகள்
கஞ்சாவுடன் ஒருவர் கைது
1 hour(s) ago
பெண் தொழிலாளி மாயம்
1 hour(s) ago
வேன்கள் மோதல் டிரைவர் பலி
1 hour(s) ago
ஆண் கணக்கில் வரவாகும் மகளிர் உரிமைத்தொகை
1 hour(s) ago
கூண்டில் சிக்காத சிறுத்தை வனத்துறை தொடர் முயற்சி
1 hour(s) ago
ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலர் மகேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோர் பேசினர். வளர்ச்சி துறையில் காலியாக உள்ள, 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் பணியிடங்களையும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள ஜீப் ஓட்டுனர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்ளையும் நிரப்ப வேண்டும்.ஊராட்சி செயலர்களை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். பெரிய பஞ்சாயத்துக்கள், பெரிய யூனியன்களை இரண்டாக பிரிக்க வேண்டும். காலை உணவு திட்டத்துக்கு தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago