உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3.87 லட்சத்துக்கு பல்வேறு விளை பொருட்கள் விற்பனை

ரூ.3.87 லட்சத்துக்கு பல்வேறு விளை பொருட்கள் விற்பனை

ஈரோடு : மொடக்குறிச்சி, உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 9,753 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.ஒரு தேங்காய், 25.89 முதல், 29.39 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,451 கிலோ எடை கொண்ட தேங்காய், 92,796 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், 120 மூட்டைகளில் வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 87.09 முதல், 93.19 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 58.99 முதல், 77.69 ரூபாய் வரையிலும் விற்பனையானது.மொத்தம், 3,362 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 2 லட்சத்து, 94,395 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, 3 லட்சத்து, 87,191 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை