உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது

டி.என்.பாளையம்:டி.என்.பாளையம் அருகே சத்தி---அத்தாணி சாலை ஏழூர் மேடு பிரிவில், அரக்கன்கோட்டை வி.ஏ.ஓ., மற்றும் பங்களாப்புதுார் போலீசார் கண்காணிப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர்.பதிவெண் இல்லாத டிராக்டரில் மணல் ஏற்றி வரப்பட்டது. அதிகாரிகளை கண்டதும் வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்ப முயன்றார்.அவரை பிடித்து விசாரித்ததில், அரக்கன்கோட்டை, ஏழூர், கருப்பணகவுண்டர் வீதியை சேர்ந்த வெள்ளியங்கிரி, 54, என்பது தெரிந்தது. டிராக்டரில் ஒரு யூனிட் மணல் இருந்தது, அரக்கன்கோட்டை வாய்க்காலில் இருந்து திருடி வந்ததாக கூறினார். மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், வெள்ளியங்கிரியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி