உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபர் கொலையில் சரண்; பிளம்பர் சிறையிலடைப்பு

வாலிபர் கொலையில் சரண்; பிளம்பர் சிறையிலடைப்பு

ஈரோடு : மொடக்குறிச்சி அருகே மலையம்பாளையம், பள்ளர் வீதி முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரீஷ், 21; அதே பகுதியை சேர்ந்த பிளம்பர் வெள்ளியங்கிரி, 36; இருவருக்கும் பெண் விவகாரம் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. சோளங்காபாளையம் டாஸ்மாக் கடை அருகே, இரவில் நண்பருடன் பேசி கொண்டிருந்த ஹரீஷை, வெள்ளியங்கிரி கத்தியால் குத்தியதில் இறந்தார். கொலையாளிகளை பிடிக்க கோரி, ஈரோடு அரசு மருத்துவமனையில் ஹரீஷின் உறவினர்கள் தர்ணா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் கொடுமுடி குற்றவியல் மற்றும் உரிமையியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வெள்ளியங்கிரி நேற்று முன்தினம் மாலை சரணடைந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிவானந்தன், பூசாரி கனகராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான செங்கோட்டையன் என்பவரை, தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி