உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்த பணியாளர்கள்

பாதாள சாக்கடை அடைப்பு சரி செய்த பணியாளர்கள்

ஈரோடுஈரோடு மாநகராட்சியில், பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். இந்நிலையில், சாக்கடையில் அடைப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஈரோடு, பெரியார் நகரில் நேற்று காலை பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்படி அங்கு சென்ற மாநகராட்சி பணியாளர்கள், அடைப்பை சரி செய்யும் நவீன கருவியுடன் கூடிய வாகனம் வரவழைக்கப்பட்டது. பின்னர், சாக்கடையில் இருந்த கழிவுநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு, அடைப்பு சரி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை