உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றிய கடைக்காரர்கள்

மாநகரில் ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றிய கடைக்காரர்கள்

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில், வணிக நிறுவனங்கள், கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, கமிஷனர் உத்தரவிட்டார்.இதன்படி பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, ஆர்கேவி சாலை, காவேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டது. இந்நிலையில் மாநகரின் முக்கிய பகுதியாக கருதப்படும் பிரகாஷ் வீதி, கச்சேரி வீதி, திருமகன் ஈவெரா வீதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, வணிக நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம், நான்கு நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கியது.இதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பாளர்கள் நேற்று தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். சாலைகளை ஆக்கிரமித்து விளம்பர பலகை பொருட்களை வைக்க கூடாதென்றும், உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை